பென்னாகரம், அக்.29 -
பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிய நியாய விலை கடைகள் கட்டி திறந்து வைக்கப்பட்டன.
மொத்தம் ₹49 லட்சம் மதிப்பீட்டில், தலா ₹7 லட்சம் செலவில் 7 இடங்களில் நவீன வசதிகளுடன் நியாய விலை கடை கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை —
-
பருவதனஅள்ளி புதூர்
-
கொட்டாயூர்
-
பெரியதோட்டம் புதூர்
-
பூதிப்பட்டி
-
மஞ்சநாயக்கனஅள்ளி
-
5வது மைல்
-
பெரியவத்தலாபுரம்
இவ்விடங்களில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்கள் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பென்னாகரம் வட்ட வழங்கல் அலுவலர் முல்லைக்கொடி, கூட்டுறவு சார் பதிவாளர் அம்பிகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், நியாய விலை கடை ஊழியர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
நீண்ட காலமாக அந்தந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிரந்தர நியாய விலை கடை கட்டிடங்கள் அமைக்கப்பட வேண்டும் என பல முறை கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை கருத்தில் கொண்டு, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி அவர்கள் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கி இந்த கடைகளை அமைத்துள்ளார். இக்கடைகள் இயங்கத் தொடங்கியுள்ளதால், பொதுமக்கள் தங்கள் அரசு அத்தியாவசிய பொருட்களை (ரேஷன்) அருகிலேயே வசதியாக பெறும் நிலை உருவாகியுள்ளது.
பொதுமக்களின் நலனுக்காக அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்தப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி அவர்கள் தெரிவித்தார்.

.jpg)